செய்திகள் :

ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் நிர்வாணமாக திடலை வலம் வருவேன்: மேத்யூ ஹைடன்

post image

ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் மெல்போர்ன் கிரிக்கெட் திடலை நிர்வாணமாக வலம் வருவேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மட்டுமின்றி, ஜோ ரூட்டுக்கும் மிக முக்கியமான தொடராகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறாத ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி வென்றதில்லை. அதேபோல, கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஷஸ் தொடரை இதுவரை இங்கிலாந்து வென்றதில்லை.

டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை சதம் விளாசியதே கிடையாது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 35.68 சராசரியுடன் 892 ரன்கள் குவித்துள்ளார். அதில் 9 அரைசதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 89 ஆகும்.

joe root
ஜோ ரூட்

இந்த நிலையில், எதிர்வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் மெல்போர்ன் கிரிக்கெட் திடலை நிர்வாணமாக வலம் வருவேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் கண்டிப்பாக சதமடிப்பார். அவர் சதமடிக்கத் தவறினால், நான் மெல்போர்ன் கிரிக்கெட் திடலை நிர்வாணமாக வலம் வருவேன் என்றார்.

கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 56.63 என்ற சராசரியுடன் 5720 ரன்கள் குவித்துள்ளார். அதில் 22 சதங்கள் மற்றும் 17 அரைசதங்கள் அடங்கும்.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Former Australian batsman Matthew Hayden has said that he will walk around the Melbourne Cricket Ground naked if Joe Root does not score a century on Australian soil.

இதையும் படிக்க: அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!

இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைய காரணம் இதுதான்; முன்னாள் கேப்டன் விளக்கம்!

இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியடைவதற்கான காரணம் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லாட்டீஃப் பேசியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்த தொடர... மேலும் பார்க்க

புதிய சாதனையை நோக்கி நகரும் லிட்டன் தாஸ்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஹாங் க... மேலும் பார்க்க

பிசிசிஐ-யின் அடுத்த தலைவரா? சச்சின் டெண்டுல்கர் விளக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ-யின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்... மேலும் பார்க்க

காஞ்சனா 4 படத்தினால் வீட்டையே பள்ளிக்கூடமாக மாற்றிய ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் குழந்தைகளுக்காக தனது முதல் வீட்டை இலவச பள்ளிக்கூடமாக மாற்றியுள்ளார்.காஞ்சனா 4 படத்தின் மூலம் கிடைத்த முன்பணத்தை வைத்து இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். நடிகர்... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங் காங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஹாங் காங் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்று வர... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக ஹாங் காங் பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங் காங்குக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் வங்கதேச... மேலும் பார்க்க