ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
Rinku: `என் வருங்கால மனைவி அப்போ அழுதாங்க' - வாழ்வை மாற்றிய தருணம் குறித்து நெகிழும் ரின்கு சிங்
ஐபிஎல் வரலாற்றில் கடந்த சில சீசன்களில் ஒரேயொரு போட்டியின் மூலம் ஆல் ஓவர் இந்தியாவுக்கே பேசுபொருளானவர் ரின்கு சிங்.
2023-ல் குஜராத் அணிக்கெதிரான அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தாவின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது.
ஆர்.சி.பி அணியின் தற்போதைய சாம்பியன் பவுலரான யஷ் தயாள் அன்று குஜராத் அணியில் அந்தக் கடைசி ஓவரை வீசினார்.
ஸ்ட்ரைக்கில் இருந்த உமேஷ் யாதவ் முதல் பந்தில் சிங்கிள் எடுத்து ரின்கு சிங்கிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார்.

2018 முதல் தொடர்ச்சியாக அடுத்தடுத்த சீசன்களில் கொல்கத்தா அணியில் ஓரிரு போட்டிகளில் ஆடி வந்தாலும் ரின்கு சிங் என்ற பெயர் குறைந்தபட்சம் கொல்கத்தா ரசிகர்கள் மத்தியில் பதியுமளவுக்குக் கூட பெரிதாக எதுவும் அவர் செய்திருக்கவில்லை.
ஆனால், அன்று அவர் அடித்த 5 பந்துகளும் சிக்ஸர்களாகப் பறந்தன. ஐ.பி.எல் வரலாற்றில் அவரின் பெயருக்குப் புதிய வரலாறு எழுதப்பட்டது.
கொல்கத்தா ரசிகர்களைத் தாண்டி அனைத்து அணிகளின் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
ஒரே இரவில் அவரின் வாழ்க்கையையே அது புரட்டிப் போட்டது. அடுத்து இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.
கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் இளம் எம்.பி-யான பிரியா சரோஜுக்கும் ரின்கு சிங்குக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், 2023-ல் 5 சிக்ஸர்கள் அடித்த அந்தத் தருணம் தன்னுடைய வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து ரின்கு சிங் மனம் திறந்திருக்கிறார்.

ராஜ் ஷமானி யூடியூப் சேனல் நேர்காணலில் இதனைப் பகிர்ந்த ரின்கு சிங், "அப்போது செல்போனில் அவர் (பிரியா சரோஜ்) அழுதுகொண்டிருந்தார். மிகவும் எமோஷனல் ஆகிவிட்டதாக சாச்சி (நிதிஷ் ராணாவின் மனைவி) என்னிடம் கூறினார்.
அன்றைய நாள் எனக்கு மிகப்பெரிய நாள். மக்கள் எல்லோரும் என்னைத் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க.
திருமணம் உட்பட நிறைய விஷயங்கள் இதனால ஈஸியாகிடும்னு நான் நெனச்சேன்.
அந்தச் சமயத்தில், ரின்கு சிங்னா யாருனு அவரோட (பிரியா) அப்பாவுக்குத் தெரியாது. கிரிக்கெட் மேல அவருக்குப் பெருசா ஆர்வம் இல்லாததால அத பத்தி அவருக்குத் தெரியல.
ஆனாலும், அந்தத் தருணம்தான் எனக்கு வாழ்க்கையையே மாற்றிய தருணம். வாழ்க்கைல என்னோட எல்லா கடின உழைப்புகளுக்குமான வெகுமதி அந்தப் போட்டியில கெடச்சது.
அங்கிருந்துதான் எல்லாம் மாறிடுச்சு. ஒரே இரவில் எல்லாமே மாறிடுச்சு" என்று கூறினார்.
2018 முதல் கொல்கத்தா அணியில் ஒரு அரைசதம் கூட அடிக்காத ரின்கு சிங், 2023 சீசனில் 4 அரைசதங்களுடன் 474 ரன்கள் குவித்தார்.
மேலும், 2018 முதல் கொல்கத்தா அணியில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான ஒப்பந்தத்தில் இருந்த ரின்கு சிங், கடந்த சீசனில் ரூ. 13 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...