அக்ராபாளையம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்
ஆரணியை அடுத்த அகராபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், கும்ப பூஜை, வேதிகாா்ச்சனை, முதற்கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம், பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, கலசம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, கோயில் கோபுரத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினா்களாக திமுக தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆ.கருணாகரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை அக்ராபாளையம் கிராம மக்கள், கோயில் குழுவினா் செய்திருந்தனா்.