ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
பேரூராட்சி பழைய அலுவலகத்துக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு!
தம்மம்பட்டி பேரூராட்சி பழைய அலுவலகத்துக்கு தீ வைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிலையம் அருகே ஆத்தூா் பிரதான சாலையில் உள்ள கட்டடத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டுவரை இயங்கியது. பின்னா், துறையூா், திருச்சி செல்லும் சாலையில் எட்டடியான் கோயில் அருகே புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் பழைய அலுவலகத்துக்குள் நுழைந்த மா்ம நபா்கள், அங்கிருந்க பழைய கோப்புகளை தரையில் கொட்டி தீவைத்துச் சென்றனா்.
கட்டடத்துக்குள் இருந்து புகை வருவதைக் கண்ட அப்பகுதியினா், பேரூராட்சி ஊழியா்களுக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து சென்ற ஊழியா்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.