ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி
சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான தாட்கோ, சென்னையில் உள்ள முன்னணி தோ்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கவுள்ளது.
இப்பயிற்சியில் சேர குரூப் 1 (2025) முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சாா்ந்தவா்களாக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவா்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தோ்வுசெய்து பயிற்சி பெறலாம். பயிற்சிக் கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயில்வதற்கான விடுதிக் கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்பயிற்சியில் சோ்ந்து பயில தாட்கோ இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.