IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
பிரேசிலை வீழ்த்திய பொலிவியா..! உலகக் கோப்பைக்கான வாய்ப்பு தக்கவைப்பு!
முன்னாள் உலக சாம்பியன் பிரேசிலை பொலிவிய அணி 1-0 என வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் பொலிவியா அணி தனது உலகக் கோப்பக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பிரேசிலை தன் சொந்த மண்ணில் பொலிவியா சந்தித்தது.
இந்தப் போட்டியில் பொலிவிய அணி வீரர் மியூகெல் டெர்செரோஸ் 45+4-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் கோல் அடித்தார்.
ஐந்துமுறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணி இந்தப் போட்டியில் ஒரு கோல்கூட அடிக்கவில்லை என்பது அந்த நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்தப் போட்டியில் 58 சதவிகித பந்தினை தன் கட்டுக்குள் வைத்திருந்த பிரேசில் அணி இலக்கை நோக்கி 3 முறை மட்டுமே பந்தை அடித்தது. மாறாக, பொலிவியா அணி 10 முறை முயற்சித்தது.
2019-க்குப் பிறகு சொந்த மண்ணில் பிரேசிலை முதல்முறையாக பொலிவியா வீழ்த்தியுள்ளது.
1994-இல் முதல்முறையாக உலகக் கோப்பைக்குத் தேர்வான பொலிவியா நான்காவது முறையாக தேர்வாக முனைப்பு காட்டி வருகிறது.
தென் அமெரிக்க பிரிவில் டாப் 6 அணிகள் மட்டும் நேரடியாக உலகக் கோப்பைக்குத் தேர்வாகும். பொலிவியா 7-ஆவது இடத்தில் இருப்பதால் 6 நாடுகளுக்கான பிளே-ஆப்ஸ் சுற்றில் விளையாடுகிறது.