செய்திகள் :

IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவம் துபே! | Asia Cup

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது

8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் குரூப் A-யிலும், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் குரூப் B-யிலும் இடம்பெற்றிருக்கின்றன.

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில், இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் இன்று மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார்.

IND vs UAE
IND vs UAE

இந்திய பிளேயிங் லெவனில், அபிஷேக் ஷர்மா, கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பிடித்தனர்.

பின்னர், பேட்டிங் இறங்கி 26 ரன்களில் பும்ராவிடம் தங்களின் முதல் விக்கெட்டை இழந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி, அடுத்த 31 ரன்களுக்கு மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்தது.

13.1 ஓவரில் 57 ரன்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதைத்தொடந்து 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி அபிஷேக் சர்மாவும், கில்லும் ஓப்பனிங் இறங்கினர்.

முதல் ஓவர் முதலே அதிரடி கட்டிய இந்த ஜோடி, 4-வது ஓவரில் அபிஷேக் சர்மாவின் (30) விக்கெட்டில் பிரிந்தது.

அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க அடுத்த ஓவரில் 3-வது பந்தில் கில்லின் வின்னிங் ஷாட்டுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.

குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

IND vs UAE
IND vs UAE

வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதை பார்ப்பதற்காக பவுலிங்கை தேர்வு செய்தேன்.

சமீபத்தில் சாம்பியன் டிராபிக்காக நம் வீரர்கள் இங்கு வந்தனர். பிட்ச் நன்றாக இருந்தது. ஆனால், ஸ்லோவாக இருந்தது. ஸ்பின்னர்களுக்கு அது சாதகமாக இருந்தது.

குல்தீப், துபே, வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டனர். தற்போது நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்ற காரணத்திற்காக அதற்கேற்ற ஆட்டத்தை அவர் (அபிஷேக்) ஆடுகிறார்.

இருநூறோ அல்லது ஐம்பதோ எதை சேஸ் செய்தாலும் அவரிடமிருந்து அபாரமான ஆட்டம் வெளிப்படும்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்காக எல்லோருமே ஆவலுடன் இருக்கிறோம்." என்று கூறினார்.

இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்
இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் கேப்டன் முகமது வசீம், "ஒரு அணியாக பேட்டிங்கை சிறப்பாக தொடங்கினோம்.

ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டத்தை இழந்தோம். அவர்கள் அபாரமான அணி.

மிகச் சிறப்பாக பந்துவீசினர். தங்களுடைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினர். அதனால்தான் அவர்கள் நம்பர் ஒன் அணி.

ஒரு அணியாக நாங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு வலுவாக மீண்டு வர முயற்சிப்போம்" என்று கூறினார்.

Rinku: `என் வருங்கால மனைவி அப்போ அழுதாங்க' - வாழ்வை மாற்றிய தருணம் குறித்து நெகிழும் ரின்கு சிங்

ஐபிஎல் வரலாற்றில் கடந்த சில சீசன்களில் ஒரேயொரு போட்டியின் மூலம் ஆல் ஓவர் இந்தியாவுக்கே பேசுபொருளானவர் ரின்கு சிங்.2023-ல் குஜராத் அணிக்கெதிரான அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல... மேலும் பார்க்க

Shreyas Iyer: "எங்களை மக்கள் ரோபோக்களாகப் பார்க்கிறார்கள்" - சிகிச்சை வலி குறித்து ஸ்ரேயஸ் உருக்கம்

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் ஒன்றரை வருடமாக இந்திய அணியில் புறக்கணிப்பட்டார்.ஆனால், அதே காலகட்டத்தில் ஐ.பி.எல் உட்பட அனைத்து உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகளைய... மேலும் பார்க்க

Dhoni: "தோனிதான் என்னை அப்படி மாற்றினார்" - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

இந்திய அணியில் தோனிக்கு முன்பு அறிமுகமாகி, பின்னர் தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறனால் அணிக்குள் நிலையான இடத்தை தக்கவைக்க முடியாமல் போன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் தமிழக வீ... மேலும் பார்க்க

Asia Cup: "பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இருப்பாரா?" - கேப்டன் சூர்யகுமார் அளித்த பதில் என்ன?

ஆசிய கோப்பை தொடர் ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் போட்டியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.நாளை, இந்தியா தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.இவ்வாறிருக்க, சூர்யகுமார் யாதவ... மேலும் பார்க்க

Richard Mille: `ஆசியக் கோப்பை பரிசுத்தொகையை விட 8 மடங்கு அதிகம்' - ஹர்திக்கின் யுனிக் வாட்ச் வைரல்!

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசியக் கோப்பைக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறது.இன்று (செப்டம்பர் 9) தொடங்கும் இத்தொடரில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், ஹாங் க... மேலும் பார்க்க

IND vs AUS: இந்திய 'ஏ' அணியை அறிவித்த பிசிசிஐ - கேப்டனாகும் ஸ்ரேயஸ்!

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடிக்கத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க