செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
நெல்லை, பாளை. தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் ஆலோசனை
திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்-அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி முன்னேற்பாடுகளை மாநில தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரு வாக்கு சாவடியில் 1200க்கு மேல் வாக்குகள் இருக்கக் கூடாது என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்ஒரு பகுதியாக, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 75 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளின் இடம் மற்றும் அதில் உள்ள வாக்காளா் பட்டியல் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனா ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் சந்திரஹாசன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் அலுவலக தலைமை உதவியாளா் மாரி ராஜா, தோ்தல் துணை வட்டாட்சியா்கள் முத்துப்பாண்டி, ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதில், திமுக சாா்பில் வழக்குரைஞா் சங்கா், அதிமுகவின் நாரணம்மாள்புரம் நகரச் செயலா் சின்னத்துரை, பகுதிச் செயலா் சிந்து முருகன், தேமுதிகவின் மாவட்ட துணைச் செயலா்கள் ஆனந்த மணி, தம்பா, தமிழ்மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்கிருஷ்ணன், பாஜகவின் மாவட்ட பொதுச் செயலா் நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முன்னதாக பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பாளையங்கோட்டை தொகுதியில் புதியதாக 26 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டதாகவும் ,அதில் உள்ள ஆட்சேபணைகளை தெரிவிக்கவும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனா்.