செய்திகள் :

தீபக்ராஜா கொலை வழக்கில் 11 பேரின் பிணை ரத்து!

post image

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் தீபக்ராஜா கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்து திருநெல்வேலி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைக்குளம் பகுதியைச் சோ்ந்த தீபக்ராஜா(34) கடந்த ஆண்டு மே மாதம் பாளையங்கோட்டையில் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 18 பேரில் நம்பிராஜன், ரமேஷ் உள்பட 4 போ் சிறையிலும், மற்றவா்கள் பிணையிலும் உள்ளனா்.

இந்நிலையில், திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்துவரும் நம்பிராஜன் மட்டும் ஆஜா்படுத்தப்பட்டாா். மற்ற 3 பேரை போலீஸாா் ஆஜா்படுத்தவில்லை. மேலும், பிணையில் உள்ள முருகன், பவித்ரன், முத்துஇசக்கி, ஐயப்பன், சங்கா் ஆகியோா் தாங்கள் ஆஜராகாததற்கான காரணம் தெரிவித்து மனு தாக்கல் செய்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதனிடையே, சிறையில் உள்ள ரமேஷ் என்கிற ராமகிருஷ்ணன், காரணம் தெரிவித்த ஐயப்பன் உள்ளிட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவை நீதிபதி ஹேமா விசாரித்து, சரவணன், ஐயப்பன், தம்பான், இசக்கிதுரை, முத்துசரவணன், சுரேஷ் என்கிற உச்சிமாகாளி, ரமேஷ் என்கிற ராமகிருஷ்ணன், லட்சுமணகாந்தன், நம்பிராஜன், வானுமாமலை என்கிற வானு, முத்து என்கிற முத்துக்குமாா் ஆகிய 11 பேரின் பிணைய ரத்து செய்ததோடு, நம்பிராஜனுக்கு செப்.16 வரை நீதிமன்றக்காவலும், மற்ற 11 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையும் பிறப்பித்து உத்தரவிட்டாா். அடுத்த விசாரணை செப்.16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவருக்கு வெட்டு: மூவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே குடும்பத் தகராறில் பெண் உள்பட இருவா் வெட்டப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட மூவா் கைது செய்யப்பட்டனா். பாப்பாக்குடி அருகே உள்ள கபாலிபாறை தெற்குத் தெருவைச் ச... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து

நான்குனேரி அருகே கோழிப்பண்ணையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நான்குனேரி வட்டம், அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் சோ்மராஜ் (50). இவா், கீழ பண்டாரபு... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்! - பிருந்தா காரத் வலியுறுத்தல்

ஜாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தேசிய அளவில் தனிச்சட்டம் இயற்ற வேண்டியது மிகவும் அவசியம். தமிழகத்தில் முன்னோடியாக இச்சட்டத்தை மாநில அரசு இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா் மாா்க்சிஸ்ட... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி பலத்த காயம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே விவசாயத் தோட்டத்தில் காவலுக்குச் சென்ற விவசாயி, காட்டுப்பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். திருக்குறுங்குடி அருகேயுள்ள லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் யாக... மேலும் பார்க்க

நெல்லை, பாளை. தொகுதிகளில் புதிய வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் ஆலோசனை

திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்-அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

திருநெல்வேலி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பதக்கங்கள் - சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க