செய்திகள் :

தாய்நாட்டுக்கு மோகன் பாகவத் நீண்ட நாள் சேவையாற்ற வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

post image

செப்டம்பர் 11-ஆம் தேதி இரண்டு மாறுபட்ட நினைவுகளைத் தூண்டுகிறது. முதலாவது, கடந்த 1893-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை ஆற்றிய நிகழ்வு. அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே, என்ற வார்த்தைகளை உரைத்து, அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரின் இதயங்களை அவர் வென்றார்.

இரண்டாவது நிகழ்வு, அமெரிக்கா மீது நடத்தப்பட்ட 9/11 பயங்கரவாத தாக்குதல் சம்பவம்.

இந்த நாள் குறித்த மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமும் உள்ளது. வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாட்டால் எழுச்சி பெற்று சமுதாய மாற்றத்திற்காகவும் ஒற்றுமை மற்றும் இணக்க உணர்வை வலுப்படுத்துவதற்காகவும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த ஒரு தலைசிறந்த ஆளுமையான மோகன் பாகவத்தின் 75-ஆவது பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மோகன் பாகவத் குடும்பத்துடனான எனது தொடர்பு மிக வலிமையானது. அவரது தந்தை மறைந்த மதுகர்ராவ் பாகவத் அவர்களுடன் நெருங்கி பணியாற்றும் அதிருஷ்டத்தை நான் பெற்றிருந்தேன். ஜோதிபுஞ்ச் என்ற எனது புத்தகத்தில் அவரைப் பற்றி விரிவாக நான் எழுதியிருக்கிறேன். சட்டத்துறையில் தனது ஈடுபாட்டுடன் தேச கட்டமைப்பிலும் அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். குஜராத் மாநிலம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வலிமைப்படுத்துவதில் அவர் மிக முக்கியப் பங்காற்றினார்.

1970களின் மத்தியில், மோகன் பாகவத் பிரச்சாரகராக (முழுநேர ஊழியராக) மாறினார். கடந்த 100 ஆண்டுகளில் தேச உணர்வினால் எழுச்சி பெற்று, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வீடுகளையும் குடும்பங்களையும் விட்டு வந்து, இந்தியாவிற்கு முன்னுரிமை என்ற இயக்கத்தின் கனவை நனவாக்குவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவரது ஆரம்ப காலம் இந்திய வரலாற்றின் இருண்ட காலத்துடன் இணைந்திருந்தது. அப்போதுதான் அன்றைய காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்டிருந்த மிக மோசமான அவசரநிலை அமலில் இருந்தது. ஜனநாயக கோட்பாடுகளை மதித்து, இந்தியாவின் செழுமையில் விருப்பம் கொண்டிருந்த அனைவரும் அவசரநிலைக்கு எதிரான இயக்கத்தை வலிமைப்படுத்துவதில் தீவிரம் காட்டினர். மோகன் அவர்களும், எண்ணிலடங்காத ஆர்எஸ்எஸ் தொண்டர்களும் இதையேதான் செய்தனர்.

மகாராஷ்டிரத்தின் ஊரக மற்றும் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக விதர்பாவில் அவர் தீவிரமாக பணியாற்றினார். அதன் பிறகு ஆர்எஸ்எஸ்-இல் பாகவத் ஏராளமான பொறுப்புகளை வகித்தார். 2000-ஆம் ஆண்டில் பொதுச்செயலாளராக பதவி வகித்த அவர் தமது தனித்துவம் வாய்ந்த செயல்பாடுகளினால் மிகுந்த சவாலான விஷயங்களையும் சுமுகமாகவும் துல்லியமாகவும் கையாண்டார். 2009-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்றதுடன் தொடர்ந்து மிகவும் துடிப்பாக பணியாற்றி வருகிறார்.

தலைவர் பதவி என்பது ஒரு நிறுவன பொறுப்பை விட மேலானதாகும். தனிநபர் அர்ப்பணிப்பு, துல்லியமான நோக்கம் மற்றும் பாரதத் தாயிடம் உறுதியான நிலைப்பாடு போன்ற செயல்பாடுகளால் தலைசிறந்த ஆளுமைகள் இந்த பொறுப்பை வரையறை செய்திருக்கிறார்கள். தமக்கு அளிக்கப்பட்ட இமாலய பொறுப்பிற்கு முற்றிலும் நேர்மையை வெளிப்படுத்தியதுடன், தமது வலிமை, ஆழ்ந்த ஞானம் மற்றும் இரக்க குணத்துடன் கூடிய தலைமைத்துவத்தையும் மோகன் பாகவத் அளித்துள்ளார்.

தொடர்ச்சி மற்றும் தகவமைப்பு ஆகியவை அவரது இரண்டு பண்புகளாகும்.

பாகவத்தின் பதவிக்காலம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறாண்டு கால பயணத்தில் மாற்றகரமான தருணமாகக் கருதப்படும். சீருடையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் முதல், பயிற்சி முகாம்களை மாற்றி அமைத்தது வரை அவரது தலைமையின் கீழ் ஏராளமான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

தேசிய கலாசாரத்திற்கும், நம் நாட்டின் கூட்டு உணர்விற்கும் ஆற்றல் அளிக்கும் ஒரு நிலையான ஆலமரம் போல ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுவதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற நாக்பூரின் மாதவ் நேத்ரா மருத்துவமனையின் துவக்க விழாவில் நான் கூறியிருந்தேன். இந்த ஆலமரத்தின் வேர்கள் மாண்புகளில் நங்கூரமிடப்பட்டிருப்பதால், அவை ஆழமாகவும் வலிமையாகவும் இருக்கின்றன. இத்தகைய மாண்புகளை வளர்ப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மோகன் பாகவத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விதம் ஊக்கமளிக்கிறது.

சமூக நலனை மேம்படுத்துவதற்காக அவர் ஐந்து மாற்றங்களை முன்வைத்துள்ளார்- சமூக இணக்கம், குடும்ப மாண்புகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தேசிய சுயதன்மை மற்றும் குடிமக்களுக்கான கடமைகள். இவை அனைத்து தரப்பு இந்தியர்களுக்கும் ஊக்கமளிக்கும். வலிமையான செழிப்பான நாட்டை நோக்கி ஒவ்வொரு தொண்டரும் கனவு காண்கிறார். இந்த கனவை நனவாக்குவதற்கு தெளிவான தொலைநோக்கு பார்வையும் ஆக்கபூர்வமான செயல்பாடும் அவசியமாகிறது. மோகன் பாகவத் இந்த இரண்டு குணங்களையும் அபரிமிதமாகப் பெற்றுள்ளார்.

மோகன் பாகவத் வசுதைவ குடும்பகம் என்பதற்கு ஒரு வாழும் உதாரணம். நாம் எல்லைகளைக் கடந்து அனைவரும் நம் சொந்தம் என்று உணரும்போது, அது சமூகத்தில் நமது நம்பிக்கை, சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்துகிறது. மோகன் பாகவத் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டுமென வாழ்த்துகிறேன்.

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

நமது நிருபர்மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதை மாநில அரசுகள் வரவேற்பதாக உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசு வாதிட்டது.மசோதாக்கள் மீது ஆ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளரானதாக வழக்கு: தில்லி நீதிமன்றத் தீா்ப்பு ஒத்திவைப்பு

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவ... மேலும் பார்க்க

மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக ... மேலும் பார்க்க

இத்தாலி பிரதமா் மெலோனியுடன் பிரதமா் மோடி பேச்சு

இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினாா். அப்போது இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே முன்மொழியப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு?

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் வி... மேலும் பார்க்க

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: ‘புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை’

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் வழக்கில், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிரமாண பத்திரம் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவாங்கூா் தேவஸ்வ வாரிய... மேலும் பார்க்க