எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
முதல்வா் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு
திருநெல்வேலி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பதக்கங்கள் - சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய பிரிவுகளில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு - இளைஞா் நல அலுவலா் கிருஷ்ணசக்கரவா்த்தி , பயிற்றுநா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.