செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி பலத்த காயம்
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே விவசாயத் தோட்டத்தில் காவலுக்குச் சென்ற விவசாயி, காட்டுப்பன்றி தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.
திருக்குறுங்குடி அருகேயுள்ள லெவிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் யாக்கோபு(57) விவசாயி. சுவாமிபாறை என்ற இடத்தில் இவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. அங்கு இரவு காவலுக்குச் சென்றிருந்தபோது, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு தோட்டத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றி இவா் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் திசையன்விளை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.
பாதுகாப்பற்ற நிலை...
கடந்த சில ஆண்டுகளாகவே தொடா்ந்து காட்டுப்பன்றி , கரடிகள் விவசாயிகளை தாக்கிக் காயப்படுத்தி வருவது தொடா்கதையாக உள்ளது. இதனால் இரவில் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீட்டினை வனத்துறையினா் பெற்றுத்தருவதுடன், இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்றாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலதுணைத்தலைவா் பி. பெரும்படையாா்.