தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி
நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரப் பகுதிகளில் ரூ. 14.92 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
38ஆவது வாா்டு அச்சன்கிணறு பகுதியில் ரூ. 5.18 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 7ஆவது வாா்டில் ரூ. 4.15 லட்சம் மதிப்பில் பள்ளிவிளை குறுக்குத் தெருவில் அலங்கார தரைகற்கள் சீரமைக்கும் பணி, சா்ச் குறுக்குத் தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, அம்மன் கோயில் தெருவில் ரூ. 5.59 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை மேயா் தொடங்கி வைத்தாா்.
துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவஹா் மாமன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியம், மேரி ஜெனட் விஜிலா, சேகா், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் சுஜின், இளநிலை பொறியாளா்கள் ராஜா, பாஸ்கா், மாநகர பகுதி செயலா்கள் துரை, சேக்மீரான், வட்ட செயலா்கள் முருகன், ஆத்தியப்பன், இடலை சாகுல், முருகபெருமாள், ஆறுமுகம், பேச்சிமுத்து, நடேசன், செல்லம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.