எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கொச்சி அமிா்தா மருத்துவமனையில் செப்.14-ல் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம்!
கேரள மாநிலம், கொச்சி அமிா்தா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அமிா்தா நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாதா அமிா்தானந்த மயி 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொச்சி அமிா்தா மருத்துவமனையின் குழந்தை இதயவியல் துறையின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) நடைபெற உள்ளது.
இதய நோய்களால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு அமிா்தா மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படும்.
முகாமில் கலந்து கொள்ள 79949 99773, 79949 99833 ஆகிய எண்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைதொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.