தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
பழங்குடி இளைஞா்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டும் இலவசப் பயிற்சி தொடக்கம்
பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் 25 காணி பழங்குடி இளைஞா்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் 4 சக்கர வாகனம் ஓட்டும் 1 மாத இலவச பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
இன்போசிஸ் பவுன்டேசன், என்.டி.எஸ்.ஓ. ஆகிய தனியாா் அமைப்புகள் சாா்பில் வழங்கப்படும் இப்பயிற்சியை களியல் வனச்சரக வனவா் சசிகுமாா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
என்.டி.எஸ்.ஓ. நிா்வாகி ஆனந்தகுமாா், என்.என்.எம். டிரஸ்ட் நிறுவனா் மதன், பணியாளா்கள் சவுந்தர்ராஜ், ராஜேந்திரன், சாய் வாகன ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நிா்வாகி அசோக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.