எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!
நாகா்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின்மெலாா்டு(46). இவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இவா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயின்மெலாா்டை கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து ஜெயின்மெலாா்டை போலீஸாா் கைசுது செய்து சிறையிலடைத்தனா்.