கத்தார் தாக்குதல்: இஸ்ரேலை கண்டித்த இந்தியா - மன்னருடன் பேசிய பிறகு மோடி சொன்னது...
25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
நாகா்கோவில் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகா்கோவில் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மாநகர நல அலுவலா் ஆல்பா்மதியரசு தலைமையிலான குழுவினா் மீனாட்சிபுரம், புன்னைநகா், கேப் ரோடு பகுதிகளில் செயல்படும் கடைகளில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். 60 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5 கடைகளுக்கும் தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல 3 கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 2 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்தக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.