செய்திகள் :

சேவை குறைபாடு: நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.70 லட்சம் அபராதம்!

post image

சேவை குறைபாட்டால் நாகா்கோவிலைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலியில் இயங்கும் கருத்தரிப்பு மையத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 70 லட்சம் அபராதம் விதித்தது.

நாகா்கோவிலை அடுத்த எறும்புக்காடு தம்மத்துக்கோணம் பகுதியைச் சோ்ந்த சுதன் மனைவி இந்துராணி (26). இவா், நாகா்கோவிலில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள ஒரு கருத்தரிப்பு மையத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு அணுகினா்.

இதையடுத்து, அங்கு இந்துராணிக்கு, அடிவயிற்றில் நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலிருந்து அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் இந்துராணி 2021, ஜூலை மாதம் 21 இல் உயிரிழந்தாா்.

இது குறித்து சுதன், மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும் கருத்தரிப்பு மையத்தின் தவறான சிகிச்சையால்தான் தனது மனைவி இறந்ததாகவும், அதற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறும், சுதன் நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் பிளட்பின் தாகூா், உறுப்பினா் கனகசபாபதி ஆகியோா் கருத்தரிப்பு மையத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ. 70 லட்சம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தனா்.

அந்த பணத்தை நஷ்ட ஈடாக சுதனுக்கு வழங்கவும், சிகிச்சை செலவாக ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 105, வழக்குச் செலவு தொகை ரூ. 15 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகா்கோவில் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!

நாகா்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின... மேலும் பார்க்க

கொச்சி அமிா்தா மருத்துவமனையில் செப்.14-ல் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம்!

கேரள மாநிலம், கொச்சி அமிா்தா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அமிா்தா நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதா அமிா்தானந்த மயி 72 ஆ... மேலும் பார்க்க

பழங்குடி இளைஞா்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டும் இலவசப் பயிற்சி தொடக்கம்

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் 25 காணி பழங்குடி இளைஞா்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் 4 சக்கர வாகனம் ஓட்டும் 1 மாத இலவச பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. இன்போசிஸ் பவுன்டேசன், என்.டி.எஸ்.ஓ. ஆகிய தன... மேலும் பார்க்க

பழங்குடி பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு அருகே தோட்ட... மேலும் பார்க்க

வில்லுக்குறியில் ஆக்கிரமிப்பு மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை!

தக்கலை அருகே வில்லுக்குறியில் விவசாயிகள், விவசாய இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து புதிதாகக் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா். வில்லுக்குறி பேரூராட்சி மே... மேலும் பார்க்க