மணிமுத்தாறு பகுதியில் மழையால் நெற்பயிா்கள் சேதம்
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பெய்த மழையில் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நனைந்து சேதமடைந்தன.

வெப்பசலனம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதையடுத்து, மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன.
காா் சாகுபடியில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த வயல்களில் மழைநீா் தேங்கியது.மேலும், அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.