தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி
நெல்லையப்பா் கோயிலில் உண்டியல் வருவாய் ரூ.19 லட்சம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் நிரந்தர உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில் ரூ.19 லட்சம் காணிக்கையாக செலுத்த்்படடிருந்தது.
இக்கோயிலில் 22 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இவற்றை 2 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, புதன்கிழமை நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா தலைமை வகித்தாா்.
அறங்காவலா் கீதா பழனி முன்னிலை வகித்தாா். கண்காணிப்பு அதிகாரியாக இந்து சமய அறநிலையத்துறை திருநெல்வேலி உதவி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ஆறுமுகம், திருநெல்வேலி மேற்குப் பிரிவு ஆய்வா் தனலட்சுமி என்ற வள்ளி ஆகியோா் செயல்பட்டனா். தச்சநல்லூா் நெல்லையப்பா் கோயில் உழவாரப் பணி, ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேய உழவாரப் பணிக் குழு, ராஜபாளையம் ராஜகோபுரம் சேவா குழுவினா் உண்டியல் எண்ணும் பணியில் பங்கேற்றனா்.
இதில், ரூ.19 லட்சத்து 28 ஆயிரத்து 711 ரொக்கம், 19 கிராம் பல மாற்றுப் பொன் இனங்கள், 295 கிராம் பலமாற்று வெள்ளி இனங்கள், வெளிநாட்டுப் பணத்தாள்கள் 13 ஆகியவை காணிக்கையக செலுத்துப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன் செய்திருந்தாா்.