செய்திகள் :

Kerala: காங்கிரஸ் நிர்வாகியை ஸ்டேஷனில் வைத்து தாக்கி பொய் வழக்கு; 4 போலீஸார் சஸ்பெண்ட்- நடந்ததென்ன?

post image

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், குன்னங்குளம் அருகே உள்ள செவ்வல்லூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுஜித்.  2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதி செவ்வல்லூர் பகுதியில் குன்னங்குளம் காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது, சாலையோரம் நின்றிருந்த சுஜித்தின் நண்பர்களை போலீஸார் தாக்கியுள்ளனர். அது பற்றி சுஜித் நியாயம் கேட்டார். இதை அடுத்து சுஜித்தை ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் குன்னங்குளம் போலீஸார். பின்னர் அவரை காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கினர். அதுமட்டும் அல்லாது அவர் மது போதையில் பிரச்னை செய்ததாகவும், போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுஜித்தை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். சுஜித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மது அருந்தவில்லை என சான்றளித்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

காங்கிரஸ் நிர்வாகி சுஜித்

இதற்கிடையே போலீஸார் தாக்கியதில் சுஜித்துக்கு காது கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தினார் சுஜித். இது சம்பந்தமாக போலீஸுக்கு எதிராக குன்னங்குளம் மஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் சுஜித். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் சம்பவ தினத்தில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளை கேட்டார். அந்த சமயத்தில் போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் காவல் நிலையத்தில்  இருந்ததால் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழங்க இயலாது என போலீஸ் அதிகாரி பதிலளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்கக் கூடாது என தகவல் அறியும் உரிமைச் சட்ட கமிஷனருக்கு சுஜித் மனு அளித்தார். மேலும், மனித உரிமை கமிஷனரிடம் சுஜித் மனு அளித்தார். மனித உரிமை கமிஷன் உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் சம்பவ சமயத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சுஜித்துக்கு வழங்கப்பட்டது.

கங்கிரஸ் நிர்வாகி சுஜித்தை போலீஸ் தாக்கும் காட்சி

அந்த வீடியோவில் சுஜித்தை அரை நிர்வாணமாக்கி காவலர்கள் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  போலீஸின் அராஜகத்தை கண்டித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இதை அடுத்து சுஜித்தை தாக்கும் வீடியோவில் இடம் பெற்றிருந்த குன்னங்குளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் நூஹ்மான், போலீஸ் அதிகாரிகள் சசீந்திரன், சந்திப், சஜீவன் ஆகிய 4 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே போலீஸ் ஜீப் ஓட்டுனர் சுஹைல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னங்குளம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சுகித் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் பதில் கூறவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

அண்டை நாடான நேபாளத்தில், இளைஞர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம், நீதிமன்றம், பிரதமர் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு பொது, தனியார் சொத்துகள் கலக... மேலும் பார்க்க

ராகுல் காந்தி வாகனம் நிறுத்தம்: "பாஜக-வின் அரசியல் பயங்கரவாதம்" - செல்வப்பெருந்தகை கண்டனம்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் (தனிப்பொறுப்பு) தினேஷ் பிரதாப் சிங், பாஜக-வினருடன் ... மேலும் பார்க்க

`உங்கள் பிரச்னையை மட்டும் பார்க்கக் கூடாது..!' - கேள்வி கேட்ட விவசாயி; கடுப்பான எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் கிணத்துக்கடவு தொக... மேலும் பார்க்க

ராஜினாமா மனநிலையில் நயினார் நாகேந்திரன்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துவிட்டு வந்ததில் தொடங்கி, 'தேசிய ஜனநாயகக் கூட்டணியிலுள்ள கூட்டணிக் கட்சிகளை நயினார் நாகேந்திரன் சரியாக அரவணைக்கவில்லை' என்று... மேலும் பார்க்க

``இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும்" - ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்!

ரஷ்யாவின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்தியா மற்றும் சீனா மீது 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெ... மேலும் பார்க்க