செய்திகள் :

``இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க வேண்டும்" - ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய ட்ரம்ப்!

post image

ரஷ்யாவின் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இந்தியா மற்றும் சீனா மீது 100% இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தியில், அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கை வகுப்பாளர்களிடையே நேற்று உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொலைபேசி வழியாகப் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம் எந்த வரிகளை விதித்தாலும், அதற்கு ஈடான வரிகளை விதிக்க அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் அதற்குச் சமமான ஈடுபாட்டைக் காட்டினால், உடனடியாகத் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம்." என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரி ஒருவர் `இந்த வியூகம் ஆசியப் பொருளாதாரங்களுக்கு எதிரான அமெரிக்காவின் குறிப்பிட்ட முன்னேற்றம்.

ரஷ்யாவின் மிகவும் விலைக் குறைவான கச்சா எண்ணெயை வாங்குவதிலிருந்து இந்தியா மற்றும் சீனாவைத் தடுப்பதே இந்த வரிகளின் முக்கிய நோக்கம்.

இரு நாடுகளுக்கும் 100 சதவிகிதம் வரை வரி விதிக்க வேண்டும் என அதிபர் உறுதியாக தெரிவிக்கிறார். கடும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான இந்த அழுத்தம், வெள்ளை மாளிகையில் அதிகரித்து வரும் அதிருப்தியின் பிரதிபலிப்பு.

சீனா, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் வரை கடும் வரிகளை விதிப்பதுதான் மிகவும் பயனுள்ள அழுத்தம் என அதிபர் ட்ரம்ப் வாதிட்டார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

இந்தியா மற்றும் சீனாவுடனான வர்த்தக உறவில் பதற்றம்

கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கியதைக் காரணம் காட்டி, இந்தியாவுடனான வரிகளை அமெரிக்கா 50% ஆக உயர்த்தியது.

இருப்பினும், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், நேர்மறையான முடிவு ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியை "மிகவும் நல்ல நண்பர்" எனக் குறிப்பிட்ட அவர், நட்பு தொடரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில்தான் நேற்று அதிபரின் இந்த ஆலோசனையின் செய்திகளும் வெளியாகியிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மும்பை மாநகராட்சித் தேர்தல்: ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்று கூட்டணி குறித்து பேசிய உத்தவ் தாக்கரே

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாத இறுதியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. மகாராஷ்டிரா அரசிய... மேலும் பார்க்க

நேபாளம்: `அரசின் தோல்வி, கும்பல் வன்முறை, பிற்போக்கு சக்திகள்...' - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை!

அண்டை நாடான நேபாளத்தில், இளைஞர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம், நீதிமன்றம், பிரதமர் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு பொது, தனியார் சொத்துகள் கலக... மேலும் பார்க்க