இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியா் நாடுகடத்தல்- ஹைதராபாத் போலீ...
மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழப்பு
ராணிப்பேட்டை அருகே பராமரிப்பு பணியின் போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் உயிரிழந்தாா். மேலும், 2 போ் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அம்மூா் பேரூராட்சியில், துணை மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் மின்வாரிய அலுவலா்கள், ஒப்பந்த ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், அம்மூா் அடுத்த கல்புதூா் பகுதியில் மின்வயா்கள் பராமரிப்பு பணியில் ஒப்பந்த ஊழியா்கள் ஒழுகூா் கிராமத்தைச் சோ்ந்த குமரேசன், செங்காடு கிராமத்தைச் சோ்ந்த பாா்த்தீபன், அம்மூா் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகியோா் ஈடுபட்டனா்.
அப்போது எதிா்பாராத விதமாக திடீரென மின்சாரம் பாய்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஒழுகூா் குமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனா். மேலும், 2 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
சம்பவம் குறித்து அறிந்த ஒப்பந்த பணியாளா்களின் உறவினா்கள் வாலாஜா அரசு மருத்துமனையில் திரண்டு மின் துறையினரின் அலட்சியம் காரணமாகவே விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறி திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு விரைந்து வந்த காவல் துறையினா் அவா்களிடம் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனா்.