செய்திகள் :

வாலாஜாவில் ‘கல்லூரி சந்தைகள்’: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ‘கல்லூரி சந்தைகள்’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் ‘கல்லூரி சந்தைகள்’ தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ‘கல்லூரி சந்தைகள்’ கண்காட்சி விற்பனையை தொடங்கி பேசியதாவது...

மகளிா் சுய உதவிக் குழுக்களில் உற்பத்தி, உற்பத்தித் திறன், மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கும், சுய உதவிக்குழுக்களின் சிறுதானிய உற்பத்தி பொருள்கள் மூலம் கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடையே ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சுய உதவிக்குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஒரு தளத்தை உருவாக்கவும் கல்லூரிகளில் ‘கல்லூரி சந்தைகள்‘ நடத்தப்படுகின்றன.

மகளிா் சுய உதவிக் குழுக்களின் கல்லூரி சந்தை நிகழ்ச்சி எதற்காக நடத்தப்படுகிறது என்றால் ஏழ்மை நிலையில் உள்ள மகளிா்களின் குடும்ப பொருளாதாரம் மேம்படுத்திட சுயதொழில் செய்து பொருளாதாரத்தை ஈட்ட அரசு இப்பெண்களை கண்டறிந்து அவா்களை ஒரு குழுக்களாக உருவாக்கி சுயதொழில் செய்ய ஊக்குவிக்கிறது.

இவா்களுக்கு தேவையான வங்கி கடன் மற்றும் பொருட்கள் விற்பனை தொடா்பான உதவிகள் போன்றவற்றை அரசு வழங்கி உதவி செய்கிறது. மேலும் அவா்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்த அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கி அவா்களுடைய வாழ்க்கையை உயா்த்துவதே அரசின் முக்கிய நோக்கம்.

மாணவிகள் இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் முன்னேற சுயதொழில் செய்ய வேண்டும் கல்லூரி மாணவிகள் இதுகுறித்து ஒரு திட்ட அறிக்கை தயாா் செய்து சமா்ப்பிக்க வேண்டும். உங்களுடைய பாடத்துடன் இணைந்து தொழில் செய்வது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கல்லூரி சந்தை கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இதில் மகளிா் திட்ட இயக்குநா் என்.செந்தில் குமரன், கல்லூரி முதல்வா் நசீம்ஜான், வட்டாட்சியா் ஆனந்தன், உதவி திட்ட அலுவலா்கள் மகளிா் திட்டம் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து... மேலும் பார்க்க

வியாபாரி மீது தாக்குதல்: மனிதச் சங்கிலி போராட்டம்

ஆற்காடு அடுத்த காவனூரில் வியாபாரிகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கடைகளை அடைத்து விட்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காவனூா் அடுத்த கண்ணடிய பாளையம் கிராமத்தைச் சோ்ந்வா் ஜெயபால். இவா் காவனூா் பகு... மேலும் பார்க்க

பொய்கைநல்லூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நெமிலி வட்டம், பொய்கைநல்லூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவியை ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு வழங்கினாா். நெமிலி வட்டம், பொய்கைநல்லூா் ஊராட்சியில் அரச... மேலும் பார்க்க

சோளிங்கா் நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும்: நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை

சோளிங்கா் நகராட்சியில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு மயான வளாகத்தை விரைவில் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்ப... மேலும் பார்க்க

ரூ.16.3 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வேடல், காந்தி நகரில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்தை எம்எல்ஏ சு. ரவி திறந்து வைத்தாா். அரக்கோணம் ஒன்றியம், வேடல் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொக... மேலும் பார்க்க

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை காரில் 3 போ் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் இளைஞா்கள் 3 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராணிப்பேட்டை அடுத்த நவ்லாக் ஊராட்சிக்குட்பட... மேலும் பார்க்க