Vikatan Digital Awards 2025: `துணிச்சல்காரன் - ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்' - Digital Icon Award Winner
டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Digital ICON Award - RJ Vikneshkanth
இன்று முக்கிய இடங்களில் ஸ்பாட் லைட்டில் பல கலைஞர்கள் ஒளிர்வதற்கு விதைப் போட்டுக் கொடுத்தவர் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த். பல பரிமாணகளெடுத்து இத்தனை ஆண்டுகளாக டிஜிட்டல் தளத்தில் கோலோச்சும் ஆர். ஜே. விக்னேஷ்காந்த்தான், டிஜிட்டல் ஐகான் விருதுக்கு ஜூரிக்கள் தேர்வு செய்திருக்கும் வெற்றியாளர்களில் ஒருவர்.

Digital ICON Award - Vikneshkanth
சோஷியல் மீடியாவை முன்னிறுத்தி ஒரு நிறுவனத்தை வார்த்தெடுத்ததில் விக்னேஷ்காந்த் சகலருக்கும் முன்னோடி. சோஷியல் மீடியாக்கள் பணப்பலன் தராத காலத்திலேயே ஒரு டிஜிட்டல் தொழில்முனைவோராக இவர் காட்டிய துணிச்சல்தான் சினிமா, சின்னத்திரை எனப் பல தளங்களுக்கு இவரை நகர்த்தியிருக்கிறது. தணியாத தாகத்தோடு அவர் வடிவமைத்த பிளாக் ஷீப், பல இளைஞர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சி நல் எதிர்காலத்தை உருவாக்கித் தந்தது.

எல்லோருக்கும் பிரியமான இந்த நட்பின் நேசன் விக்னேஷ்காந்துக்கு Digital ICON விருது வழங்கி கைகுலுக்குகிறது விகடன்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...