Vikatan Digital Awards 2025: `பயணம் சார்ந்த உலகம் - Krohan Spot' - Best Travel Vlogger Winner
டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாகத் தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Travel Vlogger
இப்பிரிவில் ஐமேக்ஸ் மீடியா, தென்கடல் மீனவன், ஓ மை தகவல், மீனவ பொன்னு சுபி, பேக்பேக்கர் குமார், Explore With Tamizh, Krohan Spot, Budget Food Travel ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்தப் பிரிவின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது `Krohan Spot' சேனல்!

Best Travel Vlogger - Rajmohan (Krohan Spot)
ஆத்மார்த்தமான பயண உலகை அதற்குரிய அழகியலோடும், சுவாரஸ்யத்தோடும் காட்சிப்படுத்துகிறது இந்த Krohan Spot சேனல். நமக்குத் தெரியாத இடங்கள், புரியாத பாதைகள் என்பதோடு நிற்காமல், பயணம் சார்ந்த விழிப்புணர்வு, பயணப்படும் வாகனங்கள் குறித்தான பதிவு என முழுக்க முழுக்க பயணமும் பயணம் சார்ந்த உலகமுமாகவே இயங்குகிறது இந்த ஸ்பாட்.

டெக்னிக்கல் அம்சங்களுக்கும் பண்பாட்டு உணர்வுக்கும் பாலம் அமைக்கும் ராஜ்மோகனின் Krohan Spot சேனலுக்கு Best Travel Vlogger விருதளித்து நெஞ்சார்ந்து மகிழ்கிறது விகடன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...