குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
``சிறையில் உயிர்வாழ முடியாது; விஷம் கொடுங்கள்'' - நடிகர் தர்ஷன் வாதம்; நீதிபதி கொடுத்த உத்தரவு
பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அதில், ``ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. அவர் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அவர் சட்டத்துக்கு கட்டுப்பட்டவரே.
நடிகர் தர்ஷன் உடனடியாக சரணடைய வேண்டும். அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
நடிகர் தர்ஷன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறைக்குள் சலுகைகளைப் பெறுவது தொடர்பாக ஏதேனும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வந்தால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்பதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்" என அதில் குறிப்பிட்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தர்ஷன் நேற்று சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் 64-வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது தர்ஷன் நீதிபதியிடம், "பல நாள்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் என்னால் உயிர் வாழ முடியாது. தயவுசெய்து எனக்கு விஷமாவது கொடுங்கள்” என்றார்.
அதற்கு நீதிபதி, "அப்படியெல்லாம் செய்யமுடியாது. தர்ஷனுக்கு படுக்கை, தலையணை வழங்குங்கள், சிறை விதிமுறைகளின்படி அவர் நடைபயிற்சி மேற்கொள்ளவும் அனுமதியுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs