Vikatan Digital Awards 2025: `அறிவுக் களஞ்சியம் - தேநீர் இடைவேளை' - Best Info Ch...
Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - Home Cooking Tamil
டிஜிட்டல் விருதுகள் 2025
டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கலைஞர்களைக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறது விகடன். அதற்கெனப் பிரத்யேகமாக `விகடன் டிஜிட்டல் விருதுகள்' விழாவையும் முதல் முறையாக நடத்தவிருக்கிறது விகடன்!
`Best Solo Creator - Male', `Best Solo Creator - Female', `Best Couple Creator' என மொத்தமாக 27 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளின் ஒவ்வொரு பிரிவின் நாமினேஷனுக்காகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருந்தது.
யூட்யூப், இன்ஸ்டாகிராம் என டிஜிட்டல் தளத்தில் அதகளப்படுத்திக் கொண்டிருக்கும் பலரும் அந்த நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். கோலாகலத்திற்குப் பஞ்சமின்றி பிரமாண்டமாக இந்த விருது விழா வருகிற செப்டம்பர் 13-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. நம் ஃபேவரைட் சோசியல் மீடியா பிரபலங்கள் பலரும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு விருது பெறவிருக்கிறார்கள்.
இப்போது, விருதுகளை வெல்லப் போகும் வெற்றியாளரையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் நம் விகடன் இணையதளத்தில் ஒவ்வொன்றாக தொடர்ந்துப் பார்க்கலாம்.
Best Cooking Channel
இப்பிரிவில் Home Cooking Tamil, Our Cooking Time, Sherin's Kitchen, Newfangled With Prem, Crispy Hut, சாரா கணேஷ் பாண்டி, சமையல் வித் ஷரோன், ரேகா எஸ், செஃப் தினேஷ், செஃப் தீனா ஆகிய சேனல்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஜூரிகளின் தேர்வுபடி இந்த பிரிவின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, `Home Cooking Tamil' சேனல்!

Best Cooking Channel - Home Cooking Tamil
தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் யூடியூப், இன்ஸ்டா என எல்லா ஏரியாவிலும் அடுப்பைப் பற்ற வைத்து நம் நாவடக்கத்துக்கும் டயட் முயற்சிக்கும் சவால் விடுகிறார் ஹேமா சுப்பிரமணியன். மாநிலங்கள் கடக்கும் இவரின் உணவு வகைகள், இந்தியா தாண்டி பல நாடுகளையும் வட்டமடிக்கின்றன.

சமையல் என்பது வேலையல்ல, அதுவொரு கலை என்பதை நிலைநாட்டும் இவரின் Home Cooking Tamil சேனலுக்கு Best Cooking Channel விருது வழங்கி அறுசுவை அன்பைப் பகிர்கிறது விகடன்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...