செய்திகள் :

நேபாளத்தில் வன்முறை: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

post image

நேபாளத்தில் வெடித்துள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகரான காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேபாள அரசுக்கு எதிராக, ஜென்-ஸி என அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய மாபெரும் போராட்டம் கலவரமாக உருவான நிலையில், அந்நாட்டின் நிர்வாகம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தில்லி மற்றும் காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும், இன்று (செப்.10) ரத்து செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தின் வன்முறைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, நேபாளத்தின் வன்முறையால் காத்மாண்டுவுக்கு இயக்கப்படும் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மோடியைப் போன்ற தலைவர் வேண்டும்: நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக

Following the unrest that has erupted in Nepal, it has been announced that all Air India flights to and from the country's capital Kathmandu will be canceled.

கத்தாா் மீது தாக்குதல்: இஸ்ரேலுக்கு பிரதமா் மோடி கண்டனம்

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா். காஸா போா் நிறுத்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த கத்தாா் தலைநகா் தோஹாவுக்கு வந்திருந்த ஹமாஸ் பிரதிநிதிகள... மேலும் பார்க்க

தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள், பெல்ஜியம் நீதிமன்றத்தில் அடுத்த திங்கள்கிழமை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து... மேலும் பார்க்க

வாகன உற்பத்தித் துறையில் முதலிடம் அடைய இலக்கு- அமைச்சா் நிதின் கட்கரி

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். தில்லியில் புதன்க... மேலும் பார்க்க

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சுவிட்சா்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினா் நிலை குறித்து சுவிட்சா்லாந்து எழுப்பிய விமா்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சுவிட்சா்லாந்தின் இந்தக் கருத்துகள் ‘ஆச்... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயா்த்துவதற்கான மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது. முன்னதாக, நா... மேலும் பார்க்க

ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது புதிய பணமுறைகேடு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ.2,900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்... மேலும் பார்க்க