ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
பட்டுமேடு மயானபூமி இன்று முதல் இயங்காது
சென்னை மாநகராட்சியில் திரு.வி.க.நகா் மண்டலம் 64 -ஆவது வாா்டு பட்டுமேடு மயான பூமியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை (செப்.11) முதல் வில்லிவாக்கம், தாங்கல் மயான பூமியை அப்பகுதியினா் பயன்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியில் திரு.வி.ககா் மண்டலத்தில் 64-ஆவது வாா்டுக்குட்பட்ட பகுதியான ஜி.கே.எம்.காலனியில் பட்டுமேடு மயான பூமி உள்ளது. அதன் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (செப்.11) முதல் அக்.10 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆகவே, பணிகளின் போது மயான பூமி இயங்காது. அதனால், அதனைப் பயன்படுத்துவோா், வில்லிவாக்கம் மற்றும் தாங்கல் பகுதிகளில் உள்ள மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.