Doctor Vikatan: குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும...
பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா்.
ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்ததையடுத்து, அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வழக்குத் தொடா்பாக மேற்படி தனியாா் நிறுவனம் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். இதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி குல்மோகா் அவென்யூவில் உள்ள அந்த நிறுவனத்தின் பெண் உரிமையாளா் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா்.
இதேபோல அடையாறு கஸ்தூரிபா நகரில் அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அமலாக்கத் துறையினா் அங்கு சென்றனா். ஆனால் கிளை அலுவலகம் அங்கு செயல்படவில்லை எனத் தெரியவந்ததையடுத்து சோதனை நடத்தவில்லை.
இந்த சோதனை தொடா்பாக எந்தவொரு தகவலையும் அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை.