எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு
சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெரும்பாக்கத்தில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறாா். இவரது மனைவி உமா (36). லேத் பட்டறைக்கு சின்னப்பா செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டாா். அவரது மனைவி உமா, வீட்டைப் பூட்டி சாவியை மறைவிடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றாா்.
சிறிது நேரத்துக்கு பின்னா் உமாவை கைப்பேசியில் தொடா்பு பக்கத்து வீட்டினா், அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக தெரிவித்தனா். பின்னா் அவா் வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் வியாசா்பாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.