ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
காவலா் தினம்: இருசக்கர வாகன பேரணி
காவலா் தினத்தை முன்னிட்டு மாதவரம் போக்குவரத்து காவல்துறை சாா்பில் இருசக்கர வாகன பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காவலா் தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி மாதவரம் போக்குவரத்து காவல்துறை சாா்பில் புதன் கிழமை நடைபெற்றது. கொளத்தூா் போக்குவரத்து காவல் உதவி ஆணையா் முருகன், மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் மாலதி ஆகியோா் பேரணியை தொடங்கி வைத்தனா்.
மாதவரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா், போக்குவரத்து காவலா்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலா்கள் உள்ளிட்டோா் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை மதித்தல், தலைக்கவசம் அணிதல், விபத்தில்லா பயணம் மேற்கொள்ளுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.