செய்திகள் :

சென்னை: "பாசமாகப் பேசுவார்; பணத்தைப் பறிப்பார்" - மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றிய பிரபல திருடன்

post image

சென்னை, புது வண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பேபி (74). இவரின் கணவர் ஜான்சன், துறைமுகத்தில் வேலை செய்து வந்தார். ஜான்சன் உயிரிழந்தநிலையில் பேபிக்கு மாதந்தோறும் பென்சன் பணம் கிடைத்து வருகிறது.

அந்தப் பணத்தை வங்கியிலிருந்து எடுக்கக் கடந்த 8-ம் தேதி பேபி ராயபுரம் எம்.எஸ்.கோவில் பகுதியில் உள்ள வங்கிக்குச் சென்றார். பின்னர் வங்கியிலிருந்து பென்ஷன் பணம் 17,500 ரூபாயை எடுத்த பேபி, அதை பையில் வைத்தார்.

வீட்டுக்குப் புறப்பட்ட பேபியிடம் வங்கியின் அருகே ஒருவர் வழிமறித்தார். அந்த நபர், பேபியிடம் என்னைத் தெரியவில்லையா எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பேபி, "கண் சரியாகத் தெரியவில்லை. அதனால்தான் உங்களை அடையாளம் காண முடியவில்லை. நீங்கள் யார்?" என்று அப்பாவியாக பேபி கேட்டிருக்கிறார்.

ரூ.18 லட்சத்தை இழந்த மூதாட்டி
மூதாட்டி

அதற்கு அந்த நபர், "பரவாயில்லை ஆயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்" எனக் கேட்டிருக்கிறார். அதற்கு பேபி, "கால்தான் வலிக்கிறது. நடக்க முடியவில்லை" எனக் கூற, "பக்கத்தில் எலும்பு டாக்டர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சென்று காண்பித்தால் ஒரு ஆயில் கொடுக்கிறார். அதைக் காலில் தடவினால் வலி எல்லாம் சரியாகிவிடும்" என அந்த நபர் பேபியிடம் பாசமாகப் பேசியிருக்கிறார்.

இதையடுத்து மூதாட்டி பேபி, கால் வலி ஆயில் கிடைக்குமா எனக் கேட்க அந்த நபர், "நானே உங்களை டாக்டரிடம் அழைத்துச் செல்கிறேன்" எனக் கூறியதோடு, பேபியைத் தன்னுடைய பைக்கில் ஏறும்படி கூறியிருக்கிறார். அதோடு பேபி வைத்திருந்த கைப்பையையும் வாங்கியிருக்கிறார். அந்த நபர் அதற்கு பேபி, என்னால் பைக்கில் உட்கார முடியாது தம்பி எனக் கூற, அப்படியென்றால் நானே ஆயில் வாங்கிக் கொண்டு வருகிறேன் எனக் கூறி பேபியிடம் கைப்பையைத் திரும்பக் கொடுத்திருக்கிறார் அந்த நபர். பின்னர் அந்த நபர் அங்கிருந்து பைக்கில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

கைது
கைது

ஆயில் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில் அங்குக் காத்திருந்த பேபிக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. கைப்பையில் வைத்திருந்த 17,500 ரூபாய் மாயமாகியிருந்தது. அதைப் பார்த்த பேபி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விவரத்தைக் கூறி கண்ணீர் விட்டிருக்கிறார். இதையடுத்து பேபிக்கு ஆறுதல் கூறியவர்கள், ராயபுரம் காவல் நிலையத்தில் பணத்தைக் காணவில்லை எனப் புகாரளிக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து பேபி, ராயபுரம் காவல் நிலையத்துக்குச் சென்று விவரத்தைக் கூறியிருக்கிறது. உடனடியாக ஆக்ஷனில் களமிறங்கிய ராயபுரம் போலீஸார், பேபி கூறிய தகவலின்படி அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர், பேபியிடம் பேசியபடி கைப்பையிலிருந்த பணத்தை நைசாக திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரை போலீஸார் தேடிப் பிடித்தனர்.

விசாரணையில் அவரின் பெயர் சிவக்குமார் (47), வடபழனி, ராகவன் காலனி 1வது தெருவைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரிடமிருந்து 17,500 ரூபாயையும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு சிவக்குமாரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து ராயபுரம் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட சிவக்குமார் மீது ஒரு கொலை வழக்கு மற்றும், பூக்கடை, அசோக் நகர், வில்லிவாக்கம், வளசரவாக்கம், அபிராமபுரம் அம்பத்தூர், சிட்லபாக்கம், சங்கர் நகர், சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

திருட்டு
திருட்டு

இவர் மூதாட்டிகளை டார்க்கெட் செய்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். திருடிய பணத்தில் ஆடம்பரமாக வாழும் சிவக்குமார், சில மாதங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். தற்போது மூதாட்டியிடம் பென்சன் பணத்தைத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிவக்குமாரைப் பொறுத்தவரை வங்கி, ஏடிஎம்-களில் பணம் எடுப்பவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களின் கவனத்தைத் திசை திருப்பத் திருடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தொடர்ந்து சிவக்குமாரிடம் விசாரித்து வருகிறோம். இந்த வழக்கில் சிவக்குமாரை சிசிடியில் பார்த்ததும் அடையாளம் கண்டு அவரைக் கைது செய்து விட்டோம்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

”நல்ல வாழ்க்கை அமையவில்லை; நாம் ஏன் வாழணும்?”- குழந்தைகளுடன் தவறான முடிவு எடுத்த சகோதரிகள்!

தஞ்சாவூர் கல்லணை கால்வாய் 20 கண் பாலம் அருகே நேற்று இரண்டு பெண்கள், பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயது சிறுவனுடன் ஆற்றில் குதித்தனர். இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆற்றில் குதித்த பெண... மேலும் பார்க்க

Digital Arrest: 8 நாள்களில் ரூ. 31 லட்சம்; போலி நீதிபதியிடம் முன்னாள் எம்.எல்.ஏ ஏமாந்தது எப்படி?

சிபிஐ, போலீஸ், நீதிபதி போன்ற பெயர்களைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது என்ற முறையில் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக ஏமாற்றி பணம் பறித்துவரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின... மேலும் பார்க்க

போலி ஐ.டி கார்டு, சீருடையில் சென்று மும்பை கடற்படையில் துப்பாக்கியைத் திருடிய நபர் - என்ன நடந்தது?

மும்பை கொலாபாவில் உள்ள நேவி நகரில் கடற்படைத்தளம் இருக்கிறது. இங்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். அப்படிப்பட்ட பாதுகாப்பு மிக்க இடத்திற்குள் மர்ம நபர் ஒருவர் சர்வசாதாரணமாக நுழைந்து ப... மேலும் பார்க்க

`புலியைப் பிடிக்க மாட்டீங்களா?' - வனத்துறை 10 பேரை புலிக்காக வைத்த கூண்டுக்குள் அடைத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை விட்டு வெளியேறிய புலி ஒன்று கடந்த சில நாள்களாக கால்நடைகளை வேட்டையாடி வருவதாகவும் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்தப் புலியைக் பிடித்து காட்டுக்குள்... மேலும் பார்க்க

கடலூர்: 5 பேரின் மண்டையை உடைத்து `இன்ஸ்டா ரீல்ஸ்’ வீடியோ! - ரௌடிகளைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

``நல்லா அழுவுடா அப்போதான் ரீல்ஸ் கெத்தா இருக்கும்’’கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தில் வேலை செய்து வரும் கார்த்தி, கட்டுமானப் பொருட்களின் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடி தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் திரிஷா (20). இவர், அண்ணாநகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது அதே ஜவுளி கடையில் வேலை செய்துவந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்... மேலும் பார்க்க