செய்திகள் :

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வு

post image

'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' எனச் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், 'அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லையென்றால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம்' எனவும் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள் என ஆசிரியர்கள் கூட்டணி சங்கங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருக்கின்றன. இது பணியில் இருக்கும் ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியிருந்தது.

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வின் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பணியில் இருக்கும் ஆசிரியர்களும் விண்ணப்பிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையில் ஏற்கனவே புதிதாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி கடைசி தேதி என்பதால் ஏராளமானோர் விண்ணபித்ததால் அன்று காலை 11 மணிக்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் முடங்கிவிட்டது.

இதனால் ஏராளமானோர் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றத்திற்குள்ளாகினர்.

tet exam

இதன் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்தது பள்ளிக்கல்வித் துறை. அதன்படி விண்ணப்பப் பதிவு செயல்முறை இன்று (10.09.2025) மாலையுடன் முடிவடைகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'trb.tn.gov.in' என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Trump: ``எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்'' - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களு டன்... மேலும் பார்க்க

``அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஏன்?'' -நிர்மலா சீதாராமன் பதில்

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவுஇது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். "இந்திய ரூபாய... மேலும் பார்க்க

ஏர்போர்ட் மூர்த்தி மீது நடந்த தாக்குதல்; "இதுதான் திராவிட மாடலா?"- நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலக வாயிலில், புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏர்போர்ட் மூர்த்தி, ... மேலும் பார்க்க

எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" - அரசை விமர்சிக்கும் ராகுல்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. ... மேலும் பார்க்க

சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா... ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்தி... மேலும் பார்க்க

``2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால்; ஓபிஎஸ், டிடிவி இருவரும்'' - அண்ணாமலை கணிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக... மேலும் பார்க்க