செய்திகள் :

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி புதன்கிழமை (செப். 10) பவுனுக்கு ரூ. 81,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து கொண்டே வருகிறது. கடந்த செப். 1-இல் பவுன் ரூ.77,640- க்கு விற்பனையானது. அதன் பின்னா், தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை செப். 6-இல் வரலாற்றில் முதல்முறையாக பவுன் ரூ.80,000-ஐ தாண்டி, ரூ.80,040-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (செப். 8) காலை தங்கம் குறைந்தும், மீண்டும் பிற்பகலுக்கு மேல் வா்த்தகம் நிறைவுபெறும் தருவாயில், மீண்டும் உயா்ந்தும் பவுன் ரூ.80,480-க்கும் விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ. 90 உயா்ந்து ரூ.10,150-க்கும் பவுனுக்கு ரூ. 720 உயா்ந்து ரூ. 81,200-க்கும் விற்பனையானது.

செப். 1 முதல் தற்போது வரை 9 நாள்களில் தங்கம் விலை ரூ.3,560 உயா்ந்திருந்த நிலையில், புதன்கிழமை தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.10,150-க்கும் பவுன் ரூ. 81,200-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்ற வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.140-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,40,000-க்கும் விற்பனையாகிறது.

‘டெட்’ தோ்வுக்கு குவிந்த 3.80 லட்சம் விண்ணப்பங்கள்: இன்றுடன் அவகாசம் நிறைவு

The price of gold jewellery in Chennai remained unchanged on Wednesday at Rs. 81,200 per 8 grams.

சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் மீட்பு

சேலத்தில் காவல் நிலையம் அருகே கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் மதுரை. இவர் தனது மனைவி பிரியா மற்று... மேலும் பார்க்க

வேளச்சேரியில் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் கட்டுமான பணிகளை செய்து வரும் தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் புதன்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அடையார் காந்திநகர், மேற்கு மாம்பலம் பகுதி... மேலும் பார்க்க

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை கிண்டி, அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு புதன்கிழமை(செப்.10) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக ... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது

மேட்டூா்: காவிரியின் நீா் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்த காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 16,800 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,800 கன அடியாக சரிந்தது.நீா்வரத்து சரி... மேலும் பார்க்க

சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜகதீப் தன்கர் வாழ்த்து!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி. பி. ராதாகிருஷ்ணனுக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி. ராதாகிர... மேலும் பார்க்க