Vikatan Digital Awards 2025: `கலந்து கட்டும் தமிழ் டெக்!' - Best Tech Channel Wi...
செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்! அடுத்தகட்ட நகர்வு என்ன?
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடைய இல்லத்தில், அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அதிமுகவிலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவா்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என கே.ஏ.செங்கோட்டையன் கடந்த வெள்ளிக்கிழமை (செப். 5) எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, கே.ஏ.செங்கோட்டையன், அவரது ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார்.
இதனிடையே, கோவையில் இருந்து புதுதில்லிக்கு கே.ஏ.செங்கோட்டையன் கடந்த திங்கள்கிழமை (செப். 8) புறப்பட்டுச் சென்றார். அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவர், மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிச் சென்றார்.
ஆனால், புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தில்லியில் நேற்று(செப். 9) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் ஆகியோரை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்த நிலையில், இன்று(செப். 10) தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை ஈடுபடவுள்ளார்.
இதற்காக, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையனின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: நேபாளத்தில் ராணுவ ஆட்சி!