"அந்தக் கேரக்டருக்கு பேசுன மாதிரியே பேசிக் கொடுங்கன்னு..!" - Dubbing Artist Sara...
இந்த சாதனையைச் செய்தது லோகாதானாம்!
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் டிக்கெட் முன்பதில் சாதனை படைத்துள்ளது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா சேப்டர் - 1 சந்திரா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹந்தி ரசிகர்களிடமும் அசத்தலான வரவேற்பைப் பெற்றதால் பல திரைகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கல்யாணி பிரியதர்ஷனை மையக் கதாபாத்திரமாக வைத்து உருவான இப்படம் வெளியான ஓரே வாரத்திற்குள் ரூ. 100 கோடியை வசூலித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.
தற்போது, லோகா ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியான 10 நாள்களில் இந்த சாதனையைச் செய்துள்ளதால் இந்தியளவில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
முக்கியமாக, மோகன்லாலின் எம்புரான் படத்தைத் தொடர்ந்து அதிவேகமாக ரூ.200 கோடி வசூலித்த மலையாளப் படமும் இதுதான்.
இந்த நிலையில், இப்படம் வெளியாகி இரண்டாம் வாரத்திலும் 2 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
இதனால், இரண்டாம் வாரத்திலும் அதிக டிக்கெட்களை விற்பனை செய்த முதல் மலையாளத் திரைப்படம் என்கிற சாதனையை லோகா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாயகியை முன்னணியாகக் கொண்டு களமிறங்கிய இப்படம் ரூ. 300 கோடி வசூலை நெருங்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் கூட்டணியில் புதிய படம்!