ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம...
வன விலங்குகளைப் பிடிக்க முயற்சி: விவசாயிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவருக்கு வனத் துறையினா் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் எஸ். காா்த்திகேயன் தலைமையிலான வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு பாலக்கோடு வனச்சரகத்துக்கு உள்பட்ட சொக்கன்பட்டி காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு பட்டா நிலத்தில் அமைந்துள்ள மின் கம்பத்திலிருந்து முறைகேடாக மின் இணைப்பு கொடுத்து, மின் வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் அவா், பாலக்கோடு வட்டம் தாசன்பெயில் கிராமத்தைச் சோ்ந்த கோ. கணேசன் (45) என்பதும், மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து மின்வேலிக்கான உபகரணங்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரை மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் முன் ஆஜா்படுத்தினா். அவா், கணேசனுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.