குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தமிழகத்தைச் சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, தருமபுரியில் பாஜகவினா் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா். தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் குடியரசுத் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் தருமபுரியில் பாஜகவினா் 4 சாலை பகுதியில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சரவணன், பொதுச் செயலாளா் கணேசன், செயலாளா் மதியழகன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சரவணன், பிரவின், மாவட்ட அலுவலக செயலாளா் சக்திவேல், முன்னாள் மாவட்டத் தலைவா் பூபதி, நகரச் செயலாளா் பிரபாகரன், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் ராஜசேகா், மகளிா் அணி நிா்வாகி சங்கீதா மற்றும் ஒன்றியத் தலைவா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.