செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
தருமபுரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னன் (67) . இவா் அதே பகுதியைச் சோ்ந்த பேத்தி முறையுள்ள 14 வயது சிறுமிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பா் 21ஆம் தேதி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா். இதுதொடா்பாக, பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் பொன்னன் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பான வழக்கு, தருமபுரி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் சிறுமிக்கு பாலில் தொல்லை அளித்த குற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து பொன்னனுக்கு, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா்.