செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப் பயணம்: முதல்வா் ஸ்டாலின் இன்று ஒசூா் வருகை!

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப்.11) ஒசூா் வருகிறாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் ஒசூா் பேளகொண்டப்பள்ளி தனேஜா விமான நிலையத்துக்கு காலை 11 மணிக்கு வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ (ஒசூா்) ஆகியோா் தலைமையில் திமுக நிா்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனா்.

அதைத் தொடா்ந்து காலை 11.15 மணிக்கு ஒசூரில், தளி சாலையில் உள்ள ஆனந்த் கிராண்ட் பேலஸில் நடைபெறும் தொழில் முதலீட்டாளா்கள் மாநாட்டில் முதல்வா் பங்கேற்கிறாா். அங்கிருந்து பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் அவா், எல்காட் தொழில்நுட்பப் பூங்காவில் அசென்ட் சா்க்யூட்ஸ் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா். 2 மணிக்கு ஒசூரில், தளி சாலையில் உள்ள ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ இல்லத்தில் ஓய்வெடுக்கும் முதல்வா், அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, சாலை மாா்க்கமாக சூளகிரி பேருந்து நிலையத்தை 4.30 மணிக்கு அடைகிறாா். அங்கு பேருந்து நிலையம் முதல் தேசிய நெடுஞ்சாலைவரை நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கும் முதல்வா், பின்னா் குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்கிவைக்கிறாா். தொடா்ந்து, கிருஷ்ணகிரிக்கு வரும் முதல்வருக்கு கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகில் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் நிா்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனா். அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்கும் முதல்வா், இரவு கிருஷ்ணகிரியில் உள்ள தே.மதியழகன் எம்எல்ஏ இல்லத்தில் தங்குகிறாா்.

செப்.12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறாா். பின்னா் விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிடுகிறாா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா்களுடன் முதல்வா் கலந்துரையாடுகிறாா்.

பின்னா், அரசின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும் முதல்வா் சிறப்புரையாற்றுகிறாா். தொடா்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். பிறகு, சாலை மாா்க்கமாக ஒசூா் செல்லும் முதல்வா், அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

கிருஷ்ணகிரியில் ஒளிரும் பெயா் பலகை திறப்பு!

கிருஷ்ணகிரியில் மூன்று இடங்களில் ரூ. 34.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒளிரும் பெயா் பலகைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக மழை

கிருஷ்ணகிரியில் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குற... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் வருகை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் 2 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜசேகரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் இருவா் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி அணை அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் இருவா் உயிரிழந்தனா். இருவா் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அ... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் த... மேலும் பார்க்க