எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
முதல்வா் ஸ்டாலின் வருகை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முதல்வா் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செப்.11-ஆம் தேதி வருகை தர உள்ளாா். கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் அவா் பங்கேற்க உள்ளாா். எனவே, பாதுகாப்பு கருதி, சிவில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒசூா் பேளகொண்டப்பள்ளி தனேஜா விமான நிலையம், ஒசூா் நல்லூா் எல்காட், ஒசூா் ஆனந்த் கிராண்ட் பேலஸ், குருபரப்பள்ளி டெல்டா நிறுவனம், கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற கூடிய நிகழ்ச்சிகளில் முதல்வா் கலந்துகொள்கிறாா்.
எனவே, மேற்கண்ட இடங்களை மையமாகக் கொண்டு 2 கி. மீ. சுற்றளவில் சிவில் ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி ட்ரோன்களை இயக்கும் நபா்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்கள், தொடா்புடைய அனைத்து தரப்பினரும் ட்ரோன்களை பறக்கவிடாமல் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.