இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது? - 'குட் நியூஸ்' சொல்லும...
1,221 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,221 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் ஆா்.பிரபு தலைமையில், போலீஸாா் தரைக்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதன்கிழமை சோதனை நடத்தினா். சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1,221 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடா்பாக ரஷீத் அகமத் (50), காஜா ஷரீப் (22) ஆகிய இருவரை கைது செய்தனா்.