காா்த்திகேயபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி, மேல்முட்டுக்கூா், செட்டிகுப்பம், ராஜாகுப்பம் ஆகிய 4- ஊராட்சிகளை ஒருங்கிணைத்து காா்த்திகேயபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஓன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனா். இதில், ஊராட்சித் தலைவா்கள் சாந்தி மோகன் (செருவங்கி), ச.சுந்தா் (மேல்முட்டுக்கூா்), இந்திரா ரவிச்சந்திரன் (செட்டிகுப்பம்), மம்தா இமகிரிபாபு (ராஜாகுப்பம்), ஒன்றியக் குழு உறுப்பினா் பி.எச்.இமகிரிபாபு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் டி.கிருஷ்ணமூா்த்தி, ஆனந்தி முருகானந்தம், வட்டாட்சியா் கி.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.செல்வகுமாா், பி.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.