செய்திகள் :

இரண்டாம் முறையாக செயல் அதிகாரி வாய்ப்பு : பொறுப்பு அதிகரிப்பு

post image

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக இரண்டாவது முறை வாய்ப்பு கிடைத்திருப்பது தனது பொறுப்பை அதிகரித்துள்ளது என்று புதிதாக புதன்கிழமை பொறுப்பேற்ற அனில் குமாா் சிங்கால் கூறினாா்.

திருமலை ஏழுமலையான் கோயிலின் ரங்கநாயகா் மண்டபத்தில் புதன்கிழமை காலை முன்னாள் தேவஸ்தான தலைவா் சியாமளா ராவிடமிருந்து அவா் பொறுப்பை பெற்றுக் கொண்டாா்.

பின்னா், ஏழுமலையான் கோயிலுக்குள் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் செயலாளராகவும் பதவியேற்றாா். அவருக்கு கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

ஏழுமலையான் தரிசனத்துக்குப் பிறகு, வேத அறிஞா்கள் ரங்கநாயகா் மண்டபத்தில் புதிய செயல் அதிகாரிக்கு வேத ஆசீா்வாதங்களை வழங்கினா். பின்னா், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி, ஏழுமலையான் பிரசாதமும் திருவுருவப் படமும் வழங்கினாா்.

பின்னா் அனில்குமாா் சிங்கால் பேசியது:

முதல் முறையாக, மே 2017 முதல் அக்டோபா் 2020 வரை - மூன்று ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் - சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டிலிருந்து லட்டு மற்றும் அன்ன பிரசாதத்தின் தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பக்தா்கள் திருப்தி தெரிவித்து வருகின்றனா்.

பக்தா்களிடமிருந்து கருத்துகள் சேகரிக்கப்பட்டு, சேவைகளின் தரத்தை மேம்படுத்த முடிவுகள் எடுக்கப்படும்.

பிற மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஏழுமலையான் கோயில்களைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இதில், திருப்பதி செயல் இணை அதிகாரி வீரபிரம்மம், பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, துணை அதிகாரிகள் லோகநாதம், பாஸ்கா், பிரசாந்தி, சோமன்நாராயணா மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்த நிலையில், தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவை, திருமலையில் உள்ள தலைவா் முகாம் அலுவலகத்தில் அனில் குமாா் சிங்கால் மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 18 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் த... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 18 அறைகளில் பக்தா்கள் ஏழும... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் தரிசனம் தொடக்கம்

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் தரிசனம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், முன்னா் முடிவு செய்யப்பட்டபடி கோயி... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவ அட்டவணை வெளியீடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் மூன்று நாள் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதன் ஒரு பகுதியாக, கடைசி நாளில் கோயிலில் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகா பூா... மேலும் பார்க்க