``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - ...
ஏழுமலையான் கோயிலில் தரிசனம் தொடக்கம்
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் தரிசனம் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டதால், முன்னா் முடிவு செய்யப்பட்டபடி கோயில் கதவுகள் பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டன.
சுமாா் 12 மணி நேரம் கழித்து திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. கோயில் சுத்திகரிப்பு, புண்யாஹவசனமும் கைங்கா்யமும் செய்யப்பட்டன. பின்னா், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.
அன்னபிரசாத விநியோகம்
சந்திர கிரகணம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்ட மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத வளாகம் காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது. சமையலறையை சுத்தம் செய்த பிறகு, பக்தா்களுக்கு அன்னபிரசாத விநியோகம் காலை 8.30 மணிக்கு தொடங்கியது.