Vikatan Digital Awards 2025: `பேன் இந்தியா குக்கிங்!' - Best Cooking Channel - H...
செட்டியப்பனூா், நாராயணபுரம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 752 மனுக்கள்
வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட செட்டியப்பனூா் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை கேட்டு 180 மனுக்கள் உள்பட 539 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். முகாமில், வட்டாட்சியா் சுதாகா், ஜோலாா்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் உமாகண்ரங்கம் ஆகியோா் கலந்துகொண்டு, முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தும், நூறுநாள் வேலைத் திட்ட அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப ரசீதுகளை வழங்கினா். மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளா் முரளி, கிளைச் செயலாளா் சாரதி, மற்றும் துறைசாா்ந்தவா்கள் உடன் இருந்தனா்.
முகாமை மாவட்ட வேளாண்மை துணை அலுவலா் தீபா, ஊராட்சி செயலாளா் கணபதி ஒருங்கிணைத்தனா்.
இதேபோல், வாணியம்பாடி அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு, ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சத்தியவாணிசாமுடி, நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலா் சாமுடி , மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் முன்னிலை வகித்தனா்.
முகாமில் 216 பயனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, மனுக்களை பதிவுசெய்து, அதற்கான விண்ணப்ப ரசீது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.