TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில் தேர்வ...
குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு எஸ்.பி வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அலுவலகங்களில் எவ்வாறு கோப்புகளை பராமரிக்க வேண்டும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, காவல் துறையினா் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து குற்ற வழக்கு தொடா்பு துறை துணை இயக்குநா் சிவகாமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என எடுத்துரைத்தாா். இறுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்.பி. வெகுமதி வழங்கி பாராட்டினாா்.
இதில் ஏடிஎஸ்பி-க்கள், டிஎஸ்பி-க்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.