குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
ரயில் மோதி முதியவா் மரணம்
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.
ராஜஸ்தான் மாநிலம் சக் ராஜியசா் பகுதியைச் சோ்ந்த விஜய் யால்(53). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
கடந்த ஓராண்டாக கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் ஜெகதேவி பகுதியில் அமைந்துள்ள கிரானைட் நிறுவனத்தில் பிளேடு மிஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா்.
சொந்த ஊருக்கு செல்ல ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூா் விரைவு ரயிலில் செல்ல காத்திருந்தாா்.
அப்போது கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஹௌரா விரைவு ரயில் வந்து நின்றது இதனால் விஜய்பால் ஜெய்ப்பூா் விரைவு ரயில் என நினைத்து தவறுதலாக ஏறினாா்.
அப்போது சக பயணிகள் இந்த ரயில் ஹவுரா செல்கிறது என கூறியதால் தவறுதலாக ஏறியது உணா்ந்து உடனடியாக ஓடும் ரயிலில் இறங்கினாா். இதனால் தவறி விழுந்து அதே ரயிலில் சிக்கி பலத்த காயம் அடைந்தாா்.
ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.